Popular Posts

Popular Posts

Tuesday, March 13, 2012

இந்த புலி பசித்தால் புல் என்ன வைக்கோலையும் தின்னும்

நண்பர்களே,
கதை சொல்லி ரொம்ப நாளாகி விட்டது அல்லவா
சற்றே சிறிய கதை. இதுலயும் வழமை போல் நம்ம ஆனந்த குமாரு  தான் ஹீரோ.


வழக்கம் போல லீவு முடிஞ்சு மெக்ஸிகோவுக்கு டுட்டிக்கு திரும்புற சமயம்.
தவிர்கமுடியாத பூகோள வானியல் பிரச்சினையால...அதுதான் நம்ம அயர்லாந்த் எரிமலை புண்ணியத்தால
அய்யாவுக்கு பிரான்க்பார்ட்ல  ட்ரான்சிட் விசா ஏற பாடாகி விட்டது.
வழமையா தரக்கூடிய இபிஸ் மற்றும் நோவோடேல் எல்லாம் புல்.
நம்மாளுக்கு அதிருஷ்டம் இஸ்டேகைன்பெகர் ர\பிரான்க்பாரர் கோப்ல புக்கிங்.
பிரான்க்பார்ட்ல அது  பிரசித்தி பெற்ற ஒரு விடுதி. முதல் முறையாக அந்த விடுதிக்கு
சென்ற ''நம்ம ஆளூ குமாரை '' ஒரு வாரம் தங்க வைத்தனர் . வரவேர்ப்பாளி  (ரிசப்ஷனிஸ்ட்)
'' சார் ! உங்கள் அறை பதிவுக்கு நாங்கள் சில பாரங்களை நிறைவு செய்ய
வேண்டியுள்ளது. அதுவரை தயவுசெய்து தாங்கள் அதோ அந்த மாடத்தில் 
நீங்கள் பார்த்து இரசிக்க சில பொருட்களை வைத்துள்ளோம். பார்த்து வாருங்கள்''
என்றார். சரி என குமாரும்  மாடம்  சென்றார். அங்கே பல்வேறு விதமான
நாடுகளைச் சேர்ந்த பலவிதமான கடிகாரங்கள் சுற்றி மாட்டப்பட்டிருந்தன.
ஒவ்வொன்றாகப் பார்த்து வந்த நம்ம ஆளு ஒரு தென் ஆப்பிரிக்கா நாட்டு
கடிகாரத்தைப் பார்த்து அதனருகேயே லயித்தபடி நின்றிருந்தார்.

அப்போது அங்கு வந்த வரவேற்பாளர்  ''சார் தங்கள் அறை தயார்'' என்றார்.

நம்ம ஆளு தன் அறைக்குள் நுழைந்த சில நிமிடங்களில் அறையின்
அழைப்பு மணி அலறியது. '' எஸ். கம் இன் '' என்று குரல் கொடுக்க
கதவைத் திறந்து கொண்டு ஒரு இளம் தென்னாப்பிரிக்க கட்டழகி
ஒருத்தி உள்ளே வந்தாள்.
''சார்... எங்கள் வரவேற்பு கூடத்தில் நீங்கள் தென்னாப்பிரிக்க கடிகாரத்தை
மிகவும் இரசித்துப் பார்த்தால் என்னை இங்கே அனுப்பி உள்ளார்கள். ஒரு வாரம்
உங்களுடன் இருந்து உங்களுடைய எந்த... எல்லாத் தேவையும் பூர்த்தி செய்வேன்.
இப்போதிருந்தே நான் உங்களுக்காக தயார் நிலையில் உள்ளேன்'' என்று கூற,
இதை சற்றும் எதிர்பாராத நம் குமாரு  என்னபேசுவதென்று தெரியாமல் தவிக்க,
அந்த பெண் '' கூச்சம் வேண்டாம். எங்கள் விடுதிக்கு வருவோரை எல்லா விதத்திலும்
திருப்திப்படுத்துவதை எங்கள் கடமையாக நினைக்கிறோம்'' என்று அவரை நெருங்கி
அணைக்க நம்ம ஆனந்த குமாரும்  உணர்ச்சி வசப்பட அரங்கேற்றம் நிறைவாக நடந்தேறியது.
மறுநாள் அதிகாலை ஆறு மணிக்கு நம்ம குமாரு  தன் பெட்டியுடன் வரவேற்பு முகப்புக்கு
வந்து தனது அறையைக் காலி செய்வதாக கூறினார்.அதிர்ச்சியடைந்த வரவேற்பாளர்
'' தாங்கள் ஒரு வாரம் தங்க வேண்டுமே ,,,,, ட்ரான்ஸ் அட்லாண்டிக் பிளைட் ஏதும் தயாரில்லையே
... என்ன ஆயிற்று.. ?'' எனறு கேட்க,
நம்ம ஆளூ எதுவும் பேசாமல் காலி செய்துவெளியேறினார்.
'' மிஸ்டர் குமார் இஸ் ஸோ செண்டிமெண்டல்   ஹி மைட் தாட் தட் ஹி வாஸ் பெர்பிடி அகைன்ஸ்ட் ஹிஸ் ஸ்பவுஸ்  வென் ஹி ஸ்லேப்ட்  வித் யு. "   அதாவது குமாரு ரொம்ப சென்டிமென்ட் டைப் போலும். அவர் நேற்று உன்னுடன் துரோகம்
இருந்ததை அவர் மனைவிக்கு செய்த துரோகமாக நினைத்து வருந்தித்தான்
புறப்பட்டு விட்டார்.'' என்று தென்னாப்பிரிக்கா அழகியிடம் வரவேற்ப்பாளர்
கூறி முடிக்க மீண்டும் உள்ளே நுழைந்த நம்ம ஆளூ குமார்  '' எனக்கு அறை வேண்டும் ''
நீங்கள் பாரத்தை பூர்த்தி செய்வதற்கு நான் அந்த கூடத்தில் போய் பார்த்து ''
என்று கூறி உள்ளே போனவர் இரண்டு நிமிடத்தில் திரும்பி வந்து...,
''இன்று எனக்கு சுவிட்சர்லாந்து கடிகாரம்பிடித்தது. நாளை ஜெர்மனி
பிடிக்கும். நாளை மறுநாள் ரஷ்யா பிடிக்கும். அடுத்தது ஜப்பான்..'' என்று
அடுக்க வரவேற்பாளரும் அழகியும் சிலையாகி நின்றனர்.
குறிப்பு: ஆனால் நான் இன்னமும் குமாரை நம்பதான் செய்கிறேன்.....அஞ்சு வருஷமா மெக்ஸிகோவில்
இருந்தாலும் புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்று

Saturday, November 13, 2010

தமிழின் முதல் அச்சு பிரசுரம்

படிமம்:Tranqebar bible 1713.JPG


காலம் கி பி 1713.



தற்போதைய எழுத்துருக்களில்....


.
சருவத்துக்கும் வல்லவருமாய....
அனாதியாய் இருக்கிறவருமாய.....
எங்கும் நிறைஞ்சிருக்கிரவருமாய் இருக்கிற....
பராபர வஸ்து
வானவர்
பூர்வ காலத்திலே பரமண்டலத்திலே இருந்து
திருவலம் பத்தின சத்தியமான
வேத
பொஸ்தகத்தின்
முதலாம் வகுப்பு...

அர்ச்யச்ற்ற மோசஸ் என்பவர்
சருவேஸ்வரனின் திருவாயிலே கேட்ட காரியங்களாவது....

ஆதியிலே பரலோகத்தையும் பூலோகத்தயும் எப்படி உண்டாக்கினார் என்பதையும்...
அவர் சகல சனங்களுக்குள்ளே ஒரு கோஷ்திரத்தை
தம்முடைய சொந்தமான சனங்களாக தெரிந்து கொண்டார் என்கிறதையும்
வெளிப்படுத்துகிற மோசேஸ் வின் அஞ்சு பொஸ்தகம் களையும்


யோசுவா என்கிறவருடைய ஞான பொஸ்தகமும் நீதிகாரர்களுடைய வர்த்தமானங்களை காண்பிக்கிற பொஸ்தகமும்
--அடங்கியிருக்குது,

Humming Bird

என்னவளே .....என்னுயிரே...
என் காவிய நாயகியே
உன் விழிகள் பேசிய மொழியினில் - நான்
இதயம் மகிழ்ந்து.. பதில் மறந்து
என் தேகம் மறந்தனே ....
என் உறவே உயிரில் கலந்த என் உறவே
உன் முகம் தான் எனக்கு
ஆதவன் என்றும் - அருகில்  நீயில்லாத
போழுதென்றும் - எனக்கு
இருளில் தான் கிழக்கு ....
அன்பே என் அன்பே அன்பே  .....
என் கண்கள்  ரெண்டும் ...
துயில மறக்குது...அது
உன் நினைவுகளை தேடி அலைந்து
என் சுவாசம் முடக்குகிறது ...
என் கண்ணே ...மணியே கண்ணின் விழியே ....
கண்ணில் புகுந்து  இதயம் மலர்ந்த
என் தேவி நீ அல்லவா
உயிரில் கலந்து உதிரம் சிலிர்த்த
உறவில் வென்ற  மாட புறா வல்லவா ....
உன்னோடு பேசும் வேளையில்
என்ன மறந்தேன்...
உன்னையே நினைத்து என்
உறக்கத்தை மறந்தேன் ....
உன் உறவால் வந்த வசந்தத்தால்
என் சோகங்களையும் மறந்தேன்...
எதனை துறந்தாலும்
உன்னால் உண்டான இந்த
புனித பந்தத்தை எத்தனை
துயர்களிலும் துறக்கலாகுமோ
துறந்த பின் தெருவில் போவேனோ ..???
என்றும் இனிக்கும்  நமது இளமை
இனிய வசந்த நினைவுகளாயவை
கனவுகளாய் அவை காலமெல்லாம் 
எனக்கு மட்டும் சொந்தம் நீ விட்டு சென்ற எச்சம்
அது தித்திக்கும் என்றும் என்றும் .........

கவிமாமணி  சாமுவேல் ராபின்சன்