Popular Posts

Popular Posts

Saturday, November 13, 2010

தமிழின் முதல் அச்சு பிரசுரம்

படிமம்:Tranqebar bible 1713.JPG


காலம் கி பி 1713.



தற்போதைய எழுத்துருக்களில்....


.
சருவத்துக்கும் வல்லவருமாய....
அனாதியாய் இருக்கிறவருமாய.....
எங்கும் நிறைஞ்சிருக்கிரவருமாய் இருக்கிற....
பராபர வஸ்து
வானவர்
பூர்வ காலத்திலே பரமண்டலத்திலே இருந்து
திருவலம் பத்தின சத்தியமான
வேத
பொஸ்தகத்தின்
முதலாம் வகுப்பு...

அர்ச்யச்ற்ற மோசஸ் என்பவர்
சருவேஸ்வரனின் திருவாயிலே கேட்ட காரியங்களாவது....

ஆதியிலே பரலோகத்தையும் பூலோகத்தயும் எப்படி உண்டாக்கினார் என்பதையும்...
அவர் சகல சனங்களுக்குள்ளே ஒரு கோஷ்திரத்தை
தம்முடைய சொந்தமான சனங்களாக தெரிந்து கொண்டார் என்கிறதையும்
வெளிப்படுத்துகிற மோசேஸ் வின் அஞ்சு பொஸ்தகம் களையும்


யோசுவா என்கிறவருடைய ஞான பொஸ்தகமும் நீதிகாரர்களுடைய வர்த்தமானங்களை காண்பிக்கிற பொஸ்தகமும்
--அடங்கியிருக்குது,

Humming Bird

என்னவளே .....என்னுயிரே...
என் காவிய நாயகியே
உன் விழிகள் பேசிய மொழியினில் - நான்
இதயம் மகிழ்ந்து.. பதில் மறந்து
என் தேகம் மறந்தனே ....
என் உறவே உயிரில் கலந்த என் உறவே
உன் முகம் தான் எனக்கு
ஆதவன் என்றும் - அருகில்  நீயில்லாத
போழுதென்றும் - எனக்கு
இருளில் தான் கிழக்கு ....
அன்பே என் அன்பே அன்பே  .....
என் கண்கள்  ரெண்டும் ...
துயில மறக்குது...அது
உன் நினைவுகளை தேடி அலைந்து
என் சுவாசம் முடக்குகிறது ...
என் கண்ணே ...மணியே கண்ணின் விழியே ....
கண்ணில் புகுந்து  இதயம் மலர்ந்த
என் தேவி நீ அல்லவா
உயிரில் கலந்து உதிரம் சிலிர்த்த
உறவில் வென்ற  மாட புறா வல்லவா ....
உன்னோடு பேசும் வேளையில்
என்ன மறந்தேன்...
உன்னையே நினைத்து என்
உறக்கத்தை மறந்தேன் ....
உன் உறவால் வந்த வசந்தத்தால்
என் சோகங்களையும் மறந்தேன்...
எதனை துறந்தாலும்
உன்னால் உண்டான இந்த
புனித பந்தத்தை எத்தனை
துயர்களிலும் துறக்கலாகுமோ
துறந்த பின் தெருவில் போவேனோ ..???
என்றும் இனிக்கும்  நமது இளமை
இனிய வசந்த நினைவுகளாயவை
கனவுகளாய் அவை காலமெல்லாம் 
எனக்கு மட்டும் சொந்தம் நீ விட்டு சென்ற எச்சம்
அது தித்திக்கும் என்றும் என்றும் .........

கவிமாமணி  சாமுவேல் ராபின்சன்